Posts

சிட்லபாக்கம் பிரச்சனை

என்னடா உங்க பிரச்சனை?
காத்து கிடந்தோம் நாங்க - வேர்த்து கிடந்தோம் ஊத்துகுளியா தினம் உருகிபோனோமே.
கேட்டு கேட்டு பாத்தோம் எங்க ஊரு கிடைக்கல புகாரு பட்டியலு போட்டும் ஒரு நாதி கேக்கல முட்டி மோதி புரண்டும் இங்க எதுவும் நடக்கல.
ஏன் சார்.. ஏன் சார்.. எங்க மூஞ்சு பாவமா இல்லயா? ஏன் சார்.. ஏன் சார்.. உங்க வேலைய செய்ய தோணலயா?
ஓ..
ஊரு பக்கம் பசுமை அதுல மேயும் எருமை அட அதுங்க கூட ஓகே நம்ம ஆபிசருங்கள பாக்கே..
ஹா.. அது  சரி
நாப்பது அடி ரோடு கொஞ்சம் ஓடுங்கி நிக்கும் பாரு ஒய்யரமான டர்னிங்கு அங்க உசந்து நிக்கும் பில்டிங்கு கேளு மச்சி கேளு எங்க ஊரு ரோடு அது அபேஸ் ஆன கதைய கேளு.
பறந்து கிடந்த ஏரி இப்ப குப்பையாச்சு நாரி ஊரு மொத்த கழிவு வந்து கலக்குதிங்க பாரு.. கேளு மச்சி கேளு நாரி போன எங்க ஏரி கதைய கேளு!
என்கிட்ட சொல்லாத அவிங்ககிட்ட சொல்லுடா..
சார்… ஏன் சார்.. ஏன் சார்.. எங்க மூஞ்சு பாவமா இல்லயா? ஏன் சார்.. ஏன் சார்.. உங்க வேலைய செய்ய தோணலயா?
சாமீ.. சாமீ.. உனக்கும் இங்க கண்ணு இல்லயா?
அட அதானே. சாமீ எங்கப்பா?
ஏரியில நாலு கோயில் நிக்குது. அது நிரம்பி ஓடுற வழியில மண்டபமும் நாப்பது வீடும் நிக்கிது. ஏரியுள்ள வர நல்ல தண்ணிக்கு நாதியில்ல வெளியதள்ளவோ ஒரு பா…

பசிக்கொண்ட நாக்கு

வெளிக்காற்று மழையில் நான் மட்டும் நனைந்தேனென அந் நா ஈரப்பதம் கொண்டிருக்கும். பண்டங்கண்ட நாய் நா போல.
முதல் முறை நனைந்த நாவிற்கு பாடஞ்சொல்ல வேண்டும் பயிற்சி அறிவிருக்காது.
பலமுறை நனைந்த நாவிற்கு பாடத்தை விடு பார்ப்பதற்கே நேரமிருக்காது.
வெளிமேடையில் சுழன்று பேசும் அரசியல் நாவும் வாயென்றாலே வசையாகும் போலீஸ் நாவும் இப்பொழுது தான் நனைய தொடங்கிய இளகிய நாவும் எனது மாமூல் வாசாலாளிகள்.
பயந்த நா பாசமான நா வெறிக்கொண்ட நா வெகுளி நா பல நாவின் நாட்களை பார்த்தவள் நான்.
எந்நாளும் எந்நாவிற்கும் என் நாவின் மீது கருணையில்லை. என் நா சுரக்கும் ஈரப்பதம் நின்றபின்னும் எதையோ உரிஞ்ச துடிக்கின்றன எனை சூழ்ந்திருக்கும் ‘உன்னத’ நாவு(ட்)கள்.
- தம்பி கூர்மதியன்

வண்டி தம்பி

Image
அவன் பெயர் ரகு. இருபதுகளை கடந்திருந்த ஒரு சாதாரண இளைஞன். அந்த வயதிற்கேற்ற ஆசைகளும் நிரம்ப பெற்றவன். அப்படி ஒரு ஆசை தான் அவனது பைக். நீண்ட நாட்களாக அவனுக்கு ஒரு பைக் வாங்கவேண்டும் என்பது கனவு. அது தான் இன்று அவனுக்கு நிறைவேறியது. ஆனால் எதிர்பாரா விதமாய் மகிழ்வுக்குபதில் அவன் முகத்தில் சோகம் குடிக்கொண்டிருக்கிறது.
‘யப்பா.. என்னைய ஏன்பா  இப்படி படுத்துற..’ ரகு அவன் அப்பாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
‘ஏன்டா.. என்ன ஆச்சு..?’ அவன் அப்பா கேட்டார்.
‘பைக் வாங்கி தர்றேன்னு சொன்னீயே பா’
‘ஆமா டா.. இதுக்கு என்ன? செமயா  இருக்குல..’ அவர் அந்த வண்டியை தட்டிக்கொண்டே கேட்டார். அது ஒரு ஸ்கூட்டர்.
‘அப்பா.. இது லேடீஸ் ஸ்கூட்டரு பா.. மனசாட்சி இல்லயா உனக்கு? இத எப்படி நான் எடுத்துட்டு வெளிய போறது..’
‘வேற என்ன வாங்குறது உனக்கு..’
‘அப்பா.. புல்லட் பைக் பா. இந்த என்னை அறிந்தால்ல அஜித் ஓட்டுவாரே. அப்படி கெத்தா..’
‘டே.. அதெல்லாம் ரிஸ்க். உன்ன போக சொல்லிட்டு  நாங்க வயித்துல நெருப்ப கட்டிகிட்டு நிக்கவா.  ஓவரா கேட்டனா விஐபி படத்துல தனுஷ் ஓட்டுற பைக் தான் வாங்கி தருவேன். மரியாதையா இத ஓட்டுறியா இல்லயா..’ அவன் அப்பா கேட்டதும்…

பேரழகி

Image
’என்னைய உனக்கு பிடிக்கலல..’ அவள் கேட்டாள். அவன் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான். அவள் கண்கள் கண்ணீரை கொப்பளிக்க தயாராகிக்கொண்டிருந்தது. ’இல்ல நான்…’ அவன் இழுத்தான். அவள் அவனது திசை பாராமலே கையை உயர்த்தி காண்பித்தாள். அவன் அதற்கு மேல் பேசவில்லை. வந்த திசையே பார்த்து சென்றுவிட்டான். அவளின் ஓரகண்கள் நடவாத அவனின் மீள்வருகைக்காக காத்துக்கொண்டிருந்தது. அவளது அறைக்கு சென்றாள். அவளது கம்ப்யூட்டரை இயக்கி அவளது படங்களை தேடினாள். அது அவளது பழைய படங்கள். சரியான உடல் வாகு, வட்ட முகம், நீண்ட முடி, அளவான உயரம் – பேரழகி என்றில்லை. அழகிகள் அணிவகுப்பில் முதல் இடம் அவளுக்கானதாய் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. கம்ப்யூட்டரை வைத்துவிட்டு கண்ணாடி முன்னால் வந்து நின்றாள். ‘தீபி.. ஏ.. தீபி…’ கண்ணாடியில் அவள் பிம்பத்தை அவளே அழைத்தாள். ‘ஏன் இப்படி ஆகிட்ட. குண்டா, முகம் கூட பெருசாகி, பாக்கவே அசிங்கமா… சீ… ஒரு குழந்தை பெத்துட்டா இப்படி ஆகிடுவியா? உன் புருசனுக்கே உன்னய பாக்க புடிக்கலயே. கருமம்’ அவள் சொல்லிவிட்டு முகத்தை அறுவறுப்பாக வைத்துக்கொண்டாள். கீழே குனிந்து இன்னும் ஏதோ மொனகினாள். சட்டென நிமிர்ந்த…

போர்க்களம் பழகு

Image
ரகுவும் நகுலும் அந்த ரோட்டில் நின்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால் ஒரு நான்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
’நீ முட்டாப்பயடா.. ஊரோட ஒத்துவாழு’ நகுல் சொல்லிவிட்டு முறைத்தான். ரகு பெருமூச்சு விட்டான்.
’ஒரு குழந்தை பிறந்ததுல இருந்து அது சாகுற வரை ஒவ்வொரு இடத்துலயும் லஞ்சம் கொடுத்துட்டு இருக்குறோமே. அது தப்பில்லயா?’
‘அப்படி தானே நம்ம நாடு இருக்கு. அதுக்கு என்ன பண்ண முடியும்?’
‘இறங்கி போராடணும்..’
‘ஆமா இருக்குற வேலைய விட்டுட்டு இறங்கி வருவாங்க இருடா..’
’அதானே. உங்களுக்கு ஒண்ணு ஒண்ணா வேலை வந்துட்டே தானே இருக்கும். நீ சொல்லுற உலகம் எப்படி தெரியுமா? ஒரு பொண்ண கற்பழிக்கிறானா அதுக்கு எதிரா சட்டம் வரணும்னு எவனும் போராடமாட்டானுங்க, அதுக்குபதில் இருக்குற பொண்ணுங்கள எல்லாம் வீட்டுல வச்சு பூட்டிப்பானுங்க. இங்க பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பொண்ணோட குடும்பம் வெளிய வந்து போராடியிருந்தாலே இந்நேரம் கற்பழிப்புக்கு எதிரா ஒரு நல்ல சட்டம் வந்திருக்கும். பத்து வயசு பொண்ண கற்பழிச்சுட்டானு நியூஸ் பேப்பர்ல படிக்கிறப்போ அப்படியே கோபம் பொத்திகிட்டு வருதுல. அந்த கோபம் ஏன் அடுத்த பக்கத்தை திருப்பினதும…

புதிய இந்தியா(?)

பகட்டு காட்டும் மேல்தளங்களும் சிதைந்துக்கொண்டிருக்கும் அடித்தளமும் கொண்ட வீட்டின் தலைவர் அவர்.
அண்டை வீட்டுக்கு எல்லாம் தினம் ஒன்றாய் பயணிப்பது அவர் வழக்கம்.
பயணத்தில் அவர் ஒன்று வைத்திருப்பார். சக்கரை பெருமளவு.
கொண்டு சென்ற சக்கரையை ருசிக்கும் அண்டைவீட்டு எறும்புகள் சொல்லும் ‘அட அடுத்த வீட்டிற்கே இவ்வளவு தருகிறான் அவன் வீட்டு எறும்புகள் கொடுத்து வைத்தன’ கண் ஓரம் பொறாமைகள் தெரியும்.
அவர் வீட்டு எறும்புகளோ மூடி போட்ட கண்ணாடி பாட்டிலில் இருக்கும் சக்கரையை முட்டி முட்டி பார்த்துவிட்டு கண்ணால் மட்டும் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்ளும்.
அண்டை வீடு சென்றதன் பரிசாக கரையானை அழைத்து வந்து வீட்டின் அடித்தளத்தில்  மேயவிட்டுவிடுவார்.
அவர் நோக்கமெல்லாம் ஒன்றுதான். புதிய இந்தியா!
- தம்பி கூர்மதியன்

இயலா புரட்சி

Image
ரகு ஓடி வந்து அந்த மின்சார ரயிலில் தாவி ஏறினான். அதிக கூட்டம். ஒரு ஓரமாய் நின்றுக்கொண்டான். கண் தெரியாத ஒருவர் சின்னதாய் பேக்கிங் செய்த கள்ளமிட்டாய் ஒன்று ஐந்து ரூபாய் என கூவிக்கொண்டே வந்தார். அவன் தன் மேல்பாக்கெட்டை தடவி பார்த்தான். இரண்டு பழைய பத்து ரூபாய் இருந்தது. கண்களை திருப்பிக்கொண்டான். வண்டி சானடோரியம் ரயில்வே நிலையத்தில் நின்றது.
கூட்டத்தை இடித்துக்கொண்டு மூன்றாம் பாலினத்தவர் நால்வர் ஏறினர். அந்த ரயில்பெட்டியில் அமைதியாக இருந்த அத்தனை பேரும் தனது ஃபோனை நோண்டுவது போலவும், மடித்து வைத்த நியூஸ் பேப்பரை மேய்வது போலவும் திடீரென பிஸியானர். அவர்களின் கைதட்டலும் பேச்சுக்குரலும் ரகுவின் அருகில் வந்தது. அவன் ‘இல்லை கா..’ என்றான்.
‘அட இல்லனு சொல்லக்கூடாது. எதனா கொடுத்துட்டு போ பா..’ அவர் சொன்னார். பாக்கெட்டில் கைவிட்டு பழைய அந்த இரண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்து பாவமாக பார்த்தான். அவர் மெல்லியதாய் சிரித்தார். இரண்டு கைகளையும் அவன் தலையில் வைத்து ஆசிர்வதித்துவிட்டு பணம் வாங்காமல் இறங்கிவிட்டார். அவன் முகத்தில் சொல்லமுடியா வலி.
பல்லாவரம் ரயில் நிலையம். முன்று ஆண்கள் ஒரு பெண் சிவப்பு நிற ல…